Friday, February 12, 2010

காரை நகர் வலந்தலை அருள்மிகு அத்திபுரம்கந்தசுவாமி கோவில் நற்பணிச் சபை

மேற்படி ஆலயத்தின் நிர்வாகச் சபையின் வேண்டுகோள்.
அன்பான வலந்தலைக் கிராம மக்களுக்கு
தங்களுக்கு இறைவனின் நல்லாசிகளுடன் எம் இனிய நல்வாழ்த்துக்களுடன் தாங்களும் தங்கள் குடும்பமும் உற்றோரும் கற்றோரும் என்றும் இனிதாக வாழ இறைவனை வேண்டுகின்றோம்.
மேலும் இறைசெயலாலும் காலம் இட்ட கட்டளையாலும் எமக்கு வழங்கப்பட்ட பணியைச் இசெய்வதற்கு கடந்த சித்திரை மாத பெளர்ணமி தினத்தன்று (2009) எமது சமூகம் சேர்ந்து இத்தலத்தில் ஓர் நற்பணிச் சபை உருவாக்கியது யாவருக்கும் தெரிந்ததே மேலும் எம்மால் பொறுப்பேற்கப்பட்டது என்பதை விட இறைவனாலும் காலத்தாலும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.


அவற்றில் அன்றாடம் செய்யும் பூசை மிக முக்கியமானதாகும் அடுத்தது தற்பொழுது இருக்கின்ற நிலையில் இருந்து அபிவிருத்தி செய்தல் மிக முக்கியமானதும், அவசியமானதுமான கோவில் புனரமைப்பாகும்.

கோவில் பூசையை எடுத்துக்கொண்டால் நாளொன்றிற்கு இரண்டுகாலப் பூசைகள் இடம்பொறுகின்றன. இவ்விரண்டு வேளை பூசைக்கும் தேவையான நைவேத்தியம் இதர பொருட்கள் பூசாரி நன்கொடைக்கும் நாளாந்தம் குறிப்பிட்ட அளவு பணம் தேவைப்படுகின்றது. (விபரம் கீழேதரப்பட்டுள்ளது) அடுத்து கோவில் புனரமைப்பை எடுத்துக்கொண்டால் கோவில் ஆலய விருட்சம் வீழ்ந்து அகற்றியது தெரிந்ததே. ஆலமரம் நின்ற காலங்களில் அதன் கீழ் வைத்து வழிபட்ட லட்சுமி நாராயணன் நவக்கிரகங்கள் வைத்து அமைக்கப்பட்டிருந்த ஆலய கட்டிடங்கள் அழிவடைந்த நிலையில் தற்போது அவ் விக்கிரகங்கள் கோவில் மண்டப உட்புறத்தில் தற்காலிகமாக வைத்து வழிபாடு செய்யப்படுகின்றது. இதற்கு வேறு இடத்தில் லட்சுமி நாராயணர் நவக்கிரகங்களுக்குரிய கோயில்கள் அமைக்கப்படுதல் வேண்டும். அடுத்து ஆறுமக சுவாமி வாசலுக்கு நேரே ஒரு சிறிய திருக்குளம் அமைத்தல் வேண்டும்.மேலும் எவ்வித பாதுகாப்பும் இல்லாதிருக்கின்ற இக்கோவிலில் எல்லலைகளுக்கு சுற்று மதிலும் அமைத்தல் வேண்டும். அத்துடன் கடந்த 1989 ஆம் ஆண்டு செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பின்னர் எவ்வித கும்பாபிசேகமும் நடைபெறவில்லை, ஆகம விதிப்படி பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்யப்படுவது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை காலங்கள் கடந்து விட்டன இனியாவது செய்வதற்கு அப்பணியை சிரமேற்கொள்ள வேண்டும். இவையாவும் முக்கியமும், அவசியமுமான முதற்தரப் பணியாகும்.

அடுத்து இரண்டாவது பணியாக அன்னதான மண்டபம் வடக்கே உள்ள வளவை வாங்கி பூந்தோட்டம் அமைத்தல் ஓர் சிறிய நீர்த்தாங்கி அமைத்து நீர் வழங்குதல், களஞ்சிய அறை அமைத்தல் என்பவை ஆகும். எம் அன்புக்கினியவர்களே ''மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்'' என்பது சான்றோர் வாக்கு அதற்காகத்தானோ இறைவன் உங்களை எல்லாம் உலகமெங்கும் அனுப்பி வைத்துள்ளார் என்பதை நினைக்கும்போது எமக்கு வியப்பாக உள்ளது. கோவில் தீருப்பணிக்கு உதவியவர்கள் ஏழேழு தலைமுறைப் பாவங்களிலிருந்து விடுபடுகின்றார்கள் என்று கீதையில் கூறப்பட்டுள்ளது. எனவே அன்பர்களே அதற்காக தாங்கள் தங்களால் இயன்ற உதவியை இவ் இறை பணிக்கு வழங்குவதையிட்டு நாம் பெருமைப்படுகின்றோம். தங்களின் தயவால் தங்களின் நண்பர்கள் உற்றார் உறவினர்களும் வழங்குவதையிட்டு நாம் பெருமைப்படுகின்றோம். எம் தொண்டுக்குரியவர்களே! நாமும் இப்பாரிய பணியை செய்வதற்கு இரு வருடங்கள் ஒதுக்கியுள்ளோம். ஒரே முறையில் நன்கு திட்டமிடாமல் தொடர்ந்தும் பணிச்சுமையை சுமக்காமல் தொடர்ந்தும் நன்கொடை என்று அசெளகரியங்களை கொடுக்காமல் காலத்தையும் வரையறுத்துள்ளோம். அடுத்து வரும் சந்ததிக்கு மனச்சலிப்பு வழங்காமல் செய்ய உள்ளோம். எனவே அன்பர்களே இறைவனின் பார்வையாலும் உங்களின் பார்வையாலும் இங்குள்ளவர்கள் எல்லோரும் இப்பணியை பார்க்க உள்ளோம். ஆகையால் தங்களின் ''ஈகை'' பணியை செம்மைப்படுத்தட்டும்.மேலும் இதற்கு முன்னரும் தாங்கள் கோவிலுக்கு உதவி செய்துள்ளீர்கள் என்பதை குறிப்பிடுவதோடு அது மட்டுமல்லாமல் கோவிலை சார்ந்வர்களுக்கும் உதவி புரிந்துள்ளீர்கள் என நினைவூட்டுகின்றோம்.

மேலும் அன்பர்களே தங்களுக்கும் தனிப்பட்ட குடும்ப சுமை உள்ளது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். நாளாந்தம் தங்களின் வாழ்க்ககைச் செலவு தாங்கள் சார்ந்த உறவினர்கள் சகோதரர்கள் நண்பர்களுக்கு உதவிகள் என்று பட்டியலிட்டு போகலாம் ஆனாலும் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாங்கள் இப்பணியைச்செய்ய கால எல்லையை வரையறுத்துள்ளோம். மேலும் எமது சமூகம் சார்ந்த எல்லா ஊர்களிலும் கோவில்கள் நல்லமுறையில் விரத்தியடைந்துள்ளன என்றும் குறிப்பிடுகின்றோம்.

மனிதநேயமிக்க அபிமானிகளே! நீங்கள் இதுவரை காலத்திலும் உங்கள் நண்பர்களுக்கு அவர்களின் தேவைகளுக்காக எவ்வளவோ உதவிகள் புரிந்துள்ளீர்கள் என்பது தங்களுக்கு தெரியும். அதுபோல எமது இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்களும் அவ் நண்பர்களிடம் இப்பணிக்குரிய உதவியை கேளுங்கள், வாங்குங்கள், வழங்குங்கள். உங்களின் சிறிய உதிவ கூட இப்பணியை இட்டுச் செல்ல காத்திருக்கிறது.எங்களால் காரைநகர் இலங்கை வங்கிக்கிளையில் ஓர் சேமிப்பு க் கணக்கு திறக்கப்பட்டுள்ளது. (இவையாவும் கிராம சேவையாளர் உதவி அரசாங்க அதிபர் இந்து சமய கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோரால் சிபாரிசு செய்யப்பட்டதாகும் ) இக்கணக்கிற்கு தங்களின் கொடையை வழங்கும்படி தெரிவித்துக் கொள்கின்றோம்.


சேமிப்பு கணக்கு இலக்கம்: 9864802 இலங்கை வங்கி காரைநகர்.

மாதாந்தப் பூசை 15000 ஆயிரம் ரூபா என மதிப்பிடகின்றோம்
அத்துடன் பபூசாரியின் நன்கொடையும் 5000 ரூபா எனவும் மொத்தம் இருபதினாயிரம் ரூபா என மதிப்பிட்டுள்ளோம்.



நன்றி
''வாழ்க வழமுடன்''

''மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்''


இங்ஙனம்

தங்களின்
உண்மையுள்ள நற்பணிச் சபையினர்

காரைநகர் வலந்தலை அருள்மிகு அத்திபுர கந்தசுவாமி கோவில்

No comments:

Post a Comment